Kaali Venkat : "மருத்துவமனையில் இடம் கிடைக்கல" - கொரோனா அனுபவத்தை பகிர்ந்த காளி வெங்கட்!

காளி வெங்கட்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டபோது தனக்கும் மருத்துவமனையில் இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாக குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகம் முழுவதும் கோவிட் வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், தற்காலிக படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. வைரஸின் சங்கிலியை உடைக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு வாரம் ஊரடங்கு கடைபிடிக்கும் அதேவேளையில், தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து மீண்ட பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக இருக்கும் காளி வெங்கட் தனக்கு ஏற்பட்ட கொரோனா அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது தனக்கும் மருத்துவமனை கிடைப்பதில் சிக்கல் இருந்ததாக தெரிவித்த அவர், நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

ALSO READ | பாலிவுட்டை வாழ வைக்கும் தென்னிந்திய சினிமா - ஒரு சுவாரஸ்ய அலசல்!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள காளி வெங்கட், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வருமுன் காப்பது மட்டுமே மிகச்சிறந்த வழி எனக் கூறியுள்ள காளி வெங்கட், அதற்கேற்ப அரசு கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 



 

 

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய காளி வெங்கட், "இந்த வீடியோவை வெளியிடலாமா? வேண்டாமா? என யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மாதிரி தான். என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன்.

ALSO READ | வயது வெறும் நம்பர் தான்... ஃபிட்னெஸில் கலக்கும் ராதிகா!

ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல் போனா, வழக்கம் போல அங்க இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது.

நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன். டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன். கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம்.

ALSO READ | நடிகை சிம்ரனின் லாக்டவுன் பொழுதுபோக்கு இது தான்!

பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி, அவர் சொல்றத கேளுங்க” என நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த தெறி, சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன், இறுதிச் சுற்று, ராட்சசன், மாரி 2, சூரறைப்போற்று, கஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காளி வெங்கட் நடித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

 
Published by:Sankaravadivoo G
First published: