கொரோனா பெருந்தொற்றால் பள்ளி வாசல்களில் ஜூம்மா தொழுகை ரத்து!

”இந்து கோவில்களில் வழக்கமாக நடத்தப்படும் சடங்குகள், பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.”

கொரோனா பெருந்தொற்றால் பள்ளி வாசல்களில் ஜூம்மா தொழுகை ரத்து!
”இந்து கோவில்களில் வழக்கமாக நடத்தப்படும் சடங்குகள், பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.”
  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி வாசல்களில் வெள்ளி கிழமைகளில் நடைபெறும் ஜூம்மா சிறப்பு கூட்டு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டு வீடுகளில் எளிய முறையில் லொகூர் தொழுகை நிகழ்வாகவே நடைபெற்ற‍து.

ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு அடுத்த‍ததாக இஸ்லாமியர் வழிபாட்டில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு முக்கிய இடம் உண்டு. இந்த கூட்டுத்தொழுகை நிகழ்வுகளுக்காகவே இஸ்லாமியர் நடத்தும் நிறுவனங்கள் வெள்ளி கிழமை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு தொழுகையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தனித்தனியாக மதிய வேளை தொழுகையில் ஈடுபட்டனர்.


நோய் தொற்றில் இருந்து தப்பிக்க‍ தனிமைபடுத்துதல் அவசியம் என்பதாலும், நோய் பிறருக்கு பரவ கூடாது என்பதாலும் ஜூம்மா தொழுகையினை கைவிட்டு இருப்பதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்த‍னர்.

தற்போதைய சூழலுக்கு ஏற்ற‍வாறு கூட்டு தொழுகையை கைவிட இஸ்லாமிய மதகுருக்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், மதிய வேளை தொழுகையின் போது  மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகங்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்து கோவில்களில் வழக்கமாக நடத்தப்படும் சடங்குகள், பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தேவாலயங்களில் கூட்டு பிராத்தனைகளும், பள்ளி வாசல்களில் வெள்ளி கிழமை ஜூம்மா தொழுகைகளும்  ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading