கொல்கத்தா- டெல்லி விமானத்தில் பயணித்த நீதிபதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: ஏர்லைன்ஸுக்கு 7 உத்தரவுகளைப் பிறப்பித்தார்

கொல்கத்தா- டெல்லி விமானத்தில் பயணித்த நீதிபதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: ஏர்லைன்ஸுக்கு 7 உத்தரவுகளைப் பிறப்பித்தார்

மாதிரிப்படம்.

மார்ச் 5ம் தேதி விமானத்தில் பயணித்த நீதிபதி சி.ஹரிசங்கர் கோவிட் காலத்தில் மாஸ்க் இல்லாமல் பயணிகள் பிரயாணித்ததைக் கண்டு உண்மையில் அதிர்ந்துதான் போனார்.

  • Share this:
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்குப் பயணித்த போது எந்த பயணியும் முகக்கவசத்தை முறையாக அணியவில்லை, அல்லது முகக்கவசம் இல்லாமலே இருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் 19 அல்லது கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிந்தபாடில்லை, மகாராஷ்டிரா டெல்லியிலும் சில இடங்களில் இன்னும் தீவிரமாகவே பரவி வருகிறது. மகாராஷ்ட்ராவில் சில மாவட்டங்களில் கண்டிப்பான ஊரடங்கு விதிமுறைகள் இருந்து வருகின்றன.

பிரிட்டனில் பரவிய மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வகை அச்சுறுத்தலும் இன்னும் நீங்கவில்லை.

இந்நிலையில் பல மாநிலங்களில் மாஸ்க் அணியாமல்தான் மக்கள் ஆங்காங்கே சுற்றி வருகின்றனர். இது ஆபத்தானது என்று உலகச் சுகாதார அமைப்பும் மத்திய சுகாதார அமைச்சரும் ஏன் பிரதமருமே கூட எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரி சங்கர் என்பவர் விமானத்தில் பயணம் செய்த போது பயணிகள் பலரும் முகக்கவசத்தை தாவாங்கட்டையில் மாட்டியிருந்தனரே தவிர முகத்தில் அல்ல, இன்னும் சிலர் முகக்கவசத்தை கழற்றி பாக்கெட்டுக்குள்ளேயே வைத்து விட்டனர், இதைப்பார்த்த நீதிபதி அதிர்ந்து போனார்.

தாமாகவே முன் வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது என்னவாயிற்று என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதோடு, விமான சேவை நிறுவனத்துக்கும் சிலபல வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவாக இட்டுள்ளார், அதாவது முகக்கவசம் அணியாதவர்கள் அல்லது முறையாக அணியாதவர்கள் யாராக இருந்தாலும் விமானதில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களை இறக்கிவிட வேண்டும்.

சரி விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம், விமானப்பயணத்தை நிரந்தரமாக தடை செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளார்.

அதே போல் விமானத்துக்குள் அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாஸ்க் அணியுமாறு அவ்வப்போது அறிவித்து அறிவுறுத்துவதோடு இல்லாமல் முறையாக அணிவித்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும் என்று ஜட்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 5ம் தேதி விமானத்தில் பயணித்த நீதிபதி சி.ஹரிசங்கர் கோவிட் காலத்தில் மாஸ்க் இல்லாமல் பயணிகள் பிரயாணித்ததைக் கண்டு உண்மையில் அதிர்ந்துதான் போனார். இதனையடுத்து தானே வழக்கு தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார், ஏன் மாஸ்க் அணிவதை விதிமுறையாக வைக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்க அவர்கள் எங்களால் முடியவில்லை என்று கூறியதையடுத்து 7 வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Published by:Muthukumar
First published: