முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு!

முன்னாள் முதல்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல செய்தியாளர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா
  • Share this:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் அளித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 20-ம் தேதி அம்மாநில முதல்வர் கமல்நாத் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செய்தியாளரின் 26 வயது மகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தார்.

தற்போது, இருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளரின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை.


இதுகுறித்து தெரிவித்த போபால் மாவட்ட சுகாதாரத்துறைத் தலைவர் சுதிர் தெஹரியா, ‘அந்த செய்தியாளருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ, அவர்களெல்லாம் அவர்களது வீட்டில் 14 நாள்களுக்கு தனிமையில் இருக்கவேண்டும். அவர்களுக்கு இருமல், காய்ச்சல் அதிகரித்தால் அவர்கள் கொரோனா முகாமை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர், ‘முன்னாள் முதல்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல செய்தியாளர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். நானும் அவரைச் சந்தித்திருந்தேன். அவருடைய மகளின் பயண விவரம் அவருக்குத் தெரிந்திருந்த நிலையில் அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கக் கூடாது’ என்று தெரிவித்தார். செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்