200 பாடகர்களை ஒன்றிணைத்து புதிய இந்தியாவிற்கான புதிய கீதம்!

200 பாடகர்கள் 14 வெவ்வேறு மொழிகளில் முன்னொருபோதும் இல்லாத வகையில் பாடலை அரங்கேற்றியுள்ளனர்

200 பாடகர்களை ஒன்றிணைத்து புதிய இந்தியாவிற்கான புதிய கீதம்!
News 18
  • News18
  • Last Updated: May 23, 2020, 4:10 PM IST
  • Share this:
ஓர் தேசம் ஓர் குரல்,  200 பாடகர்களை ஒன்றிணைத்து ‘ஜெயத்து ஜெயத்து பாரதம், வசுதேவ குடும்பகம்' என்ற புதிய கீதத்தின் பன்மொழி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

Covid-19 தொற்றுநோய் இதுவரை இல்லாத அளவிற்கு, நம்மை கூட்டுத் தீர்மானத்தை எடுக்க வைத்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர், இந்தியா அதன் மிகப்பெரிய சுகாதார அவசரநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், நமக்கு தேவையானது நம்மை ஒன்றிணைக்கும் குரல்களே. கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய தேசத்தின் கீதமாக ஓர் தேசம் ஓர் குரல் அறிமுகப்படுவதன் மூலம், இந்தியா அதன் பலமான  பன்முகத்தன்மையை ஒரு கலையாக சிறந்த வழியில் கொண்டாட முயற்சிக்கிறது.  இதனை முக்கியமாக தொகுத்து வழங்க Indian Singers Rights Association (ISRA)   மற்றும் Asian Paints முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 17, ஞாயிற்றுக்கிழமை  ஓர் தேசம் ஓர் குரல் கீதத்தை, 200 பாடகர்கள் 14 வெவ்வேறு மொழிகளில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 'ஜெயத்து ஜெயத்து பாரதம், வசுதேவ குடும்பகம்' பாடலை அற்புதமாக ஒரு  கேபெல்லா வடிவில் இணைந்தனர். பாடகர்கள் ஒவ்வொரு திசையில் தொலைதூரத்தில் இருந்தபோதும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிலிருந்து தங்கள் குரலை பதிவு செய்து ஒருங்கிணைத்து ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்பது இன்னும் பிரமிக்க வைக்கிறது. வீடியோவில் இடம்பெற்ற புகழ்பெற்ற கலைஞர்களின் பெயர்கள் சில  ஆஷா போஸ்லே , அனுப் ஜலோட்டா, அல்க யாக்னிக், ஹரிஹரன், கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சானு, மகாலட்சுமி ஐயர், மனோ, பங்கஜ் உதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன், ஷான்,சோனு நிகாம், சுதீஷ் போஸ்லே, சுரேஷ் வாட்கர், ஷைலேந்திர சிங், சீனிவாஸ், தலாத் அஜீஸ், உதித் நாராயண், ஷங்கர் மகாதேவன் மற்றும் ஜஸ்பீர் ஜஸ்ஸி.


தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைத்தளம், செயலிகள், OTT, VOD, ISP, DTH  மற்றும் CRBT உள்பட 100 தளங்களில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஒளிபரப்பு தளங்கள், சமூக பகிரல்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்கள் ஆதரவு அளித்துள்ளன. இப்பாடலை ஒளிபரப்புவதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் PM Cares நிதிக்குச் செல்லும், இது Covid  -19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை முதலில்  காண விரும்புகிறீர்களா? வரலாற்று சிறப்புமிக்க  ஓர் தேசம் ஓர் குரல் கேபெல்லா இசைநிகழ்ச்சியை கீழே காண்க.

Asian paints-யை பொறுத்தவரை, சோனு நிகாம், சீனிவாஸ் மற்றும் ISRO வின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் டண்டான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட  ஓர் தேசம் ஓர் குரல் தளத்தை ஆதரிப்பது மிகபெரிய வாய்ப்பாக இருந்தது. Asian paintsயின்  தலைமை நிர்வாக அதிகாரியும் எம்.டி.யுமான அமித் சிங்கிள் கூறுவது, “Asian paints எப்போதும் மக்கள் மீது அக்கறை செலுத்தும் ஒரு பொறுப்பான நிறுவனம். ஒரு தேசமாக நாம் இன்று எதிர்காலத்திற்காக எதிர்கொள்ளும் சவாலில், முன்னேறி நடவடிக்கை எடுக்க இதைவிட சிறந்த தருணம் இல்லை. வீ

டுகளிடையேயான எங்கள் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கருத்தில் கொண்டு, கிட்டத்தட்ட நம் நாட்டில் மிகவும் புகழ்பெற்ற 200 கலைஞர்களின் வீடுகளிலிருந்து  சேர்க்கப்பட்ட இந்த ஆழமான குரல்களுக்கு,  நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒரு இந்திய நிறுவனமாக, PM Cares  நிதிக்கு பங்களித்து  நம் நாட்டு மக்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவளிப்பதில் உற்சாகம் அடைகிறோம். ஓர் தேசம் ஓர் குரல் என்பது ஒரு கீதம் மட்டுமல்ல, மக்களின் தற்போதைய உணர்ச்சிகளின்  பிரதிபலிப்பே ஆகும்.  இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறி  இது நம் நாட்டை ஊக்குவித்து, ஒன்றிணைத்து முன்பை விட  வலுவானதாக அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ”

தேவைப்படும்போது தாராளமாக நன்கொடை வழங்குவது Asian paints-யின்  தன்மைக்கு அப்பாற்பட்டது. நிறுவனம் ஏற்கனவே ரூ. 35 கோடி PM Cares நிதிக்கும்  சில மாநிலங்களின் முதல்வர் நிதிக்கும்  வழங்கியுள்ளது. அவர்கள் இது இந்நிறுவனத்தை  இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக மாற்றும் என்றும்  மேலும் இது மக்களின் வாழ்க்கையில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும்,ஓர் தேசம் ஓர் குரல் திட்டம் அதன் சொந்த சவால்களையும்  முன் வைத்துள்ளது.

குறிப்பாக இந்த சமூக இடைவெளி உள்ள காலங்களில், இந்த மகத்தான தேசிய அளவிலான ஒருங்கிணைத்த செயல்கள் தடைகளை தகர்த்தெறிந்து நம்மை ஒன்றிணைத்து உள்ளது.  பெரும்பாலான புதிய கலைஞர்களுக்கு தேவையான பதிவு உபகரணங்கள் அவர்கள் வீட்டில்  இல்லை. அவரவரின் தனிப்பட்ட பாகங்கள், வீட்டில் பதிவு செய்யப்பட்டவைகளை கூர்மையாக கவனித்து ஒருங்கிணைக்கப்பட வேண்டியிருந்தது.

ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி, மனிதநேயத்தைக் கொண்டாடும் இக்கலைஞர்கள் அவர்களின் வீடுகளிலிருந்து நம்முடைய வீடு  வரை இந்தியர்களின் தனித்துவமான  மதிப்புகளை தெரிவிக்க முடிந்தது. அவர்களின் மனமார்ந்த இசை திறமைகள் மற்றும் புத்திசாலித்தனம், ஓர் தேசம் ஓர் குரல்  தளத்தால் மிகவும் அற்புதமாக ஒன்றிணைக்கப்பட்டது, இதனால் மட்டுமே செய்தியை பகிர முடிந்தது. நமது அனைவரின் எதிர்காலமும்  தனிப்பட்ட செயல்களைச் சார்ந்து இருக்கும் இந்த நேரத்தில், இவை தான் உண்மையிலேயே எடுத்துரைக்க வேண்டிய மதிப்புகள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading