ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் : பரிசோதனையாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த முடிவு

அமெரிக்காவைத் தவிர மற்ற பகுதிகளில் அஸ்ட்ரா ஸெனிகா தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் : பரிசோதனையாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த முடிவு
மாதிரி படம்
  • Share this:
கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனையை ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

பரிசோதனையாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனையை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்த ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி 60,000 பேருக்கு செலுத்தப் பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் முதன்முறையாக அதிக அளவில் பரிசோதனையாளர்களுக்கு செலுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனையிலும் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.காற்றின் மாசுபாட்டிற்கும் குழந்தைகளின் நினைவாற்றலுக்கும் தொடர்பு உண்டா..? என்ன சொல்கிறது ஆய்வுதற்போது அமெரிக்காவைத் தவிர மற்ற பகுதிகளில் அஸ்ட்ரா ஸெனிகா தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading