அமெரிக்காவில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கலாம் - ஜோ பைடன் பகீர் தகவல்

கொரோனா தொற்று குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசிகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதையும் பகிர்ந்து கொள்ள டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பைடன்.

அமெரிக்காவில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கலாம் - ஜோ பைடன் பகீர் தகவல்
ஜோ பைடன்
  • Share this:
அமெரிக்காவில் வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்க நேரிடலாம் என அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், தான் அதிபராக பதவி ஏற்பதற்க்குள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டக்கூடும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசிகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதையும் பகிர்ந்து கொள்ள டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பைடன். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமது சொந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்போவதாக கூறியிருக்கிறார்.


ALSO READ |  ரீல் இல்ல ரியல் பைலட்... 'சூரரைப் போற்று' படத்தில் வந்த பெண் பைலட் குறித்த சுவாரஸ்ய தகவல்

இதனிடையே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் புகார் தெரிவித்ததை அடுத்து ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

  

இதையடுத்து நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், ஜார்ஜியா மாகாணத்தை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading