அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

 • Share this:
  கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அமெரிக்காவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை தருவதாக இருக்கின்றது.

  அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

  இந்த கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட பின்னர் பேசிய பைடன், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்து கொள்ளுங்கள் என நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். சமீபத்தில், புதியவகை கொரோன வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: