Home /News /coronavirus-latest-news /

நாளை முதல் இயங்க இருக்கிறது ஜிப்மர் மருத்துவமனை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு..!

நாளை முதல் இயங்க இருக்கிறது ஜிப்மர் மருத்துவமனை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு..!

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி

ஜிப்மர்க்கு தொலைபேசி மற்றும் காணொளியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும். இந்த சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

கொரோனா காரணமாக புதுச்சேரி ஜிப்மரில் உள்ள வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளன. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள காரணத்தினால் குறிப்பிட்ட வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் 8-ஆம் தேதி முதல் துவங்கும் என  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில் 44 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடந்தது.

இதுவரை வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும். இந்நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என கூறியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனை வரும் மே 8-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது.

இச்சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும். சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தொலைபேசி, காணொலி மூலம் சிகிச்சை தரும் தேதி பதிவு செய்துள்ள தொலைபேசியில் குறுந்தகவலாக தரப்படும்.

நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்ந நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் போக்குவரத்துக்கு எவ்வித பொறுப்பும் ஏற்க இயலாத நிலையில் உள்ளது என்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, JIPMER, Puducherry

அடுத்த செய்தி