Home /News /coronavirus-latest-news /

மக்களை மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு..!

மக்களை மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு..!

நடிகர் கென் ஷிமுரா

நடிகர் கென் ஷிமுரா

கென், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜப்பானிய நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 70.

    உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், அதன் பரவும் வேகத்தால் பலரை மன உளைச்சலுக்கு செய்துள்ளது. அப்படி கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் சிலர் தப்பித்தாலும் உயிரிழப்புகளும் அதிகமடைந்து தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கடந்த 20-ம் தேதி நோய்த்தொற்று இருப்பதால் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மார்ச் 23-ம் தேதி அவர் கொரோனா மற்றும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டோக்கியோவை அடுத்துள்ள ஹிகசிமிராயமா என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த கென் ஷிமுரா ஜப்பானிய ‘ராக் பேண்ட் மற்றும் காமெடி குழுவான தி ட்ரிஃப்டர்ஸ் என்ற குழுவில் இணைந்து பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். தொடர்ந்து 1980 -களில் ஹிட்டான பாஹா டொனோசாமா மற்றும் ஹென்னா ஓஜிசான் உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார் கென் ஷிமுரா. கடைசி வரை நடிப்பைக் கைவிடாமல் மக்களை மகிழ்வித்து வந்த நிலையில் அவரது உயிரை கொரோனா வைரஸ் பறித்துக் கொண்டது. அவரது மறைவுக்கு ஜப்பானிய மக்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க: தமிழ்ப் பட ஸ்டைலில் நகைச்சுவையுடன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட சிவா



    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி