கொரோனா அச்சம்: ஜப்பான் கப்பலில் தவிக்கும் 3,700 பயணிகள்: 136 பேருக்கு வைரஸ் பாதிப்பு

கொரோனா அச்சம்: ஜப்பான் கப்பலில் தவிக்கும் 3,700 பயணிகள்: 136 பேருக்கு வைரஸ் பாதிப்பு
டைமண்ட் கப்பல்
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், ஜப்பான் சொகுசு கப்பலில், வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில், முதல் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அந்நாட்டில் 908 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், 2002 ஆம் ஆண்டு சீனாவை தாக்கிய சார்ஸ் வைரஸை விட, கரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சீன சுகாதாரத்துறை அறிவித்தள்ளது.

சீனாவில் இதுவரை 40,171 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை சீன அரசு உறுதி செய்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 62 பேருக்கு புதிதாக வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக விளங்கும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். சீனாவுக்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்குதலில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.


வைரஸ் தாக்குதலைக் கண்டறியும் உபகரணங்கள், சீனாவில் பற்றாக்குறையாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீன அரசு அறிவித்துள்ளதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிப்பின் மையமாக விளங்கும் ஹுபேய் மாகாணத்தில் கடந்த 10 நாட்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நம்பிக்கையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் வெற்றியடைந்துள்ளதை உறுதிபடுத்த முடிகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து சீன புத்தாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், சீனாவின் பல பகுதிகளில் தொழிற்சாலைகளும், அலுவலகங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இருந்தபோதும் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிப்பதில் சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த நிபுணர் குழு, சீனாவிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்து தடையை சீன அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து கனடா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் புருஸ் அய்ல்வர்ட் தலைமையிலான நிபுணர் குழு சீனா விரைகிறது.

இதற்கிடையில், ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை 136 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்யும் உட்கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அனைவரையும் சோதனை செய்த பிறகே கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் எழுந்துள்ள நிலையில், ஜப்பான் அரசு செய்வதறியாது திணறிவருகிறது.Also see:

First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading