பதவி உயர்வு பெற்ற சிறை வார்டனுக்கு கொரோனா பாதிப்பு

பதவி உயர்வு பெற்று சேலம் மத்திய சிறைக்கு பணியாற்ற இருந்த வார்டனுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற சிறை வார்டனுக்கு கொரோனா பாதிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 18, 2020, 8:56 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 37070 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது.





படிக்க: சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை

படிக்க: இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு



இன்று 1017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், திருச்செந்தூரில் உள்ள கிளை சிறையில் இரண்டாம் நிலை வார்டனாக பணியாற்றி வந்தவர், முதல் நிலை வார்டனாக பதவி உயர்வு பெற்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவர் நேற்று பணியில் சேர இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, இன்று தொற்று இருப்பது உறுதியானது. அடுத்து தூத்துக்குடி சென்ற அவரை அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading