கொரோனா சிகிச்சை மையத்தில் குரங்குகள் அட்டகாசம் - தடுக்கும் போலீஸாரின் நூதன முயற்சி

கொரோனா சிகிச்சை மையத்தில் குரங்குகள்,

டெல்லி சத்தர்பூர் கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதையடுத்து இந்திய-திபெத் எல்லை போலீஸார் நூதன முயற்சியைக் கையாண்டு தடுத்து வருகின்றனர். 

  • Share this:
    டெல்லி சத்தர்பூர் கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதையடுத்து இந்திய-திபெத் எல்லை போலீஸார் நூதன முயற்சியைக் கையாண்டு தடுத்து வருகின்றனர்.

    புதுடெல்லி சத்தர்பூரில் 500 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தினுள் எண்ணற்ற குரங்குகள் புகுந்து விளையாடி வருகின்றன.

    இதனையடுத்து பல வழிமுறைகளைக் கையாண்டும் பயனளிக்காத நிலையில் இந்திய-திபெத் எல்லை போலீசார் வளாகத்தினுள் நீண்டவாலுடைய ஒருவகையான கரடிக் குரங்கு தோற்றத்தையுடைய கட் அவுட்டை வைத்துள்ளனர், இதைப்பார்த்து குரங்குகள் மிரண்டு சிகிச்சை மைய வளாகத்துக்குள் வருவதில்லை என்கின்றனர் அவர்கள்.



    இங்கு கடந்த சில தினங்களாக கும்பலாக வரும் குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் மீது பாய்ந்து அச்சுறுத்தி வந்தன. குறிப்பாக கொரோனா தடுப்பு பிபிஇ கவச உடை அணிந்தோரை இந்தக் குரங்குகள் தாக்குகின்றன.

    இந்நிலையில் இந்த நீண்டவாலுடைய ஒரு வகை கரடிக்குரங்கு தோற்றமுள்ள கட் அவுட்டை வடிவமைத்து வைத்துள்ளனர். இந்த கட் அவுட்டை மையத்தின் மற்ற இடங்களுக்கும் எடுத்துச் சென்று வைப்பதால் இதைக் கண்டு பயந்து குரங்குகள் வருவதில்லை என்கின்றனர் இந்த மைய பாதுகாவலர்கள்.

    இந்த மையத்தை நடத்துபவர்கள் இந்திய-திபெத் எல்லை போலீஸ் அமைப்பாகும். தினசரி நோயாளிகளை இங்கு அனுமதிக்கின்றனர். முதலாம் கொரோனா அலையின் போது சத்தர்பூரில் இந்த 500 படுக்கை கோவிட் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. பிறகு கொரோனா தொற்றுக் குறையத் தொடங்கியதும் மையம் மூடப்பட்டது.



    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,734 புதிய கொரோனா தொற்றுக்கள் ஏற்பட 340 பேர் மரணமடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 56,059 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21,846 ஆக அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 10,918 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டு 4,329 ஆக அதிகரித்தது.

    ஆனால் தினரசி பாதிப்புகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகின்றன, 3 லட்சத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆங்காங்கே மாநிலங்கள் குறிப்பிட்ட தளர்வுகளுடன் பெரும்பகுதி முழு லாக் டவுனை செயல்படுத்தி வருகின்றன.

     
    Published by:Muthukumar
    First published: