வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்...

வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்...

மாதிரி படம்

வாக்குப்பதிவின் போது கொரோனா முன்னெச்சரிக்கையாக, வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? 

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான தேர்தலை காட்டிலும், இந்த முறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, வாக்குச்சாவடிக்கு வெளியே 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் செல்ல வேண்டும்.

  நுழைவுவாயிலில் வாக்காளர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த சானிடைசரும் கையுறைகளும் வழங்கப்படும். தொடர்ந்து, அவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படும் போது,  குறிப்பிட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். அவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரத்தில், வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

  தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பிறகு, முதல் தேர்தல் அலுவலர் மாஸ்கை அகற்ற கூறி அடையாள அட்டையை பரிசோதிப்பார். இரண்டாவது அலுவலர் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து கையெழுத்து பெற்ற பிறகு, மூன்றாவது அலுவலர் பூத் சிலிப்பை பரிசோதித்து வாக்களிக்க அனுமதி அளிப்பார்.

  இதையடுத்து வாக்களிக்கும் இயந்திரத்தில், விரும்பும் சின்னத்திற்கு நேரே உள்ள பொத்தானை அழுத்திய பிறகு, சிவப்பு நிற ஒளியுடன் பீப் சத்தம் எழுந்தால் வாக்காளரின் ஓட்டு வெற்றிகரமாக பதிவானதாக பொருளாகும்.  அருகே உள்ள விவிபேட் கருவி மூலம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். வாக்களித்த பிறகு, கையுறையை வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அங்குள்ள கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க... உங்களது வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி?

  இறுதியாக மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கவச உடை அணிந்து தங்களது வாக்கை பதிவு செய்யலாம்.  அதேபோல், அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: