ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து மீண்டும் ஒரு கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும் நபர்கள் தப்பியோடுவது வாடிக்கையாகி வருகிறது.

  • Share this:
சென்னையில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது,

இதற்கிடையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிலர் கொரோனா சிகிச்சையில் இருக்கும்போது தப்பித்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.

சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.


இதே போல சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயது ஆண் கொரோனா நோயாளி தப்பி ஓடிவிட்டார். இவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 22 ம் தேதி நள்ளிரவில் அயனாவரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் தப்பியோடினார். ராஜிவ்காந்தி மருத்துவமனை, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தப்பியோடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் மறுநாளே திருபத்தூர் அருகே அவர் பிடிபட்டார்.

இதே போல கோயம்பேடு மார்க்கெட்டின் கூலித் தொழிலாளியான சின்மயா நகரைச் சேர்ந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவர், கடந்த 15ம் தேதி காலை மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்று விட்டார். இந்த நபரை தேடும் பணியிலும் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, கடந்த மாதம் 29ம் தேதி பள்ளிகரணையை சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் கடந்த 7 ம் தேதி நள்ளிரவில் கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாயமான நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார்கள் டுபட்டனர்.

இந்த நிலையில் தப்பியோடிய நபர் அதிகாலையில் மீண்டும் வந்தார். டீசாப்பிட போனதாகவும் டீக்கடைகள் இல்லை என்பதால் வேறொரு வார்டில் இருந்த நண்பரை பார்க்கபோனதாகவும் அங்கு அனுமதிக்காததால் மீண்டும் வந்து விட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் தப்பித்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது.

Also read... தமிழகத்தில் 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு: இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு










Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading