• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு - பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு நோட்டீஸ்

20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு - பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு நோட்டீஸ்

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக பொது சுகாதார இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Share this:
    சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில், மே 20-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி வரை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதித்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

    அதிகபட்சமாக ஜூன் 5-ம் தேதி 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய தகவல் தராததால், சுகாதாரத்துறையின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தமிழக பொது சுகாதார இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சிக்கு விவரங்களை தினசரி கொடுத்துவருவதாக ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

    Also read... மூத்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை - அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: