• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் பிரதமர்..

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் பிரதமர்..

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

கொரோனா தடுப்பூசியை இஸ்ரேலில் முதல் நபராக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போட்டுக் கொண்டார்.

  • Share this:
    இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் முதல் நபராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகும்.

    டெல் அவிவில் உள்ள ஷெபா (Sheba) மருத்துவ மையத்திற்கு வந்த நெதன்யாகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தான் முன்மாதிரியாக இருப்பதாகக் கூறினார். இது ஒரு உற்சாகமான தருணம் என்று கூறிய நெதன்யாகு, ஃபைசர் தடுப்பூசியை தான் நம்புவதாகத் தெரிவித்தார். நெதன்யாகு தடுப்பூசி போட்டுக் கொண்ட நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இஸ்ரேலில் முதற்கட்டமாக இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    Also read: போலீஸ் நாடகமாடி தொழிலதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் பணம், விலையுயர்ந்த கார் கொள்ளை... ஐவர் கைது.. மூளையாக செயல்பட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

    ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொரோனா தொற்றை சரிவர கையாளாதது குறித்த புகார்களால் அவர் பதவி விலக வேண்டும் என்று சுமார் ஆறு மாதங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் இந்த நிகழ்வு நடந்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: