• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ஈஷா பள்ளிகளை அளிக்கிறோம் - சத்குரு

கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ஈஷா பள்ளிகளை அளிக்கிறோம் - சத்குரு

ஈஷா

ஈஷா

கொரோனா சிகிச்சைக்காக, ஈஷா வித்யா பள்ளிகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்

  • Share this:
    கொரோனா சிகிச்சைக்காக, ஈஷா வித்யா பள்ளிகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாளொன்றுக்கு 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பால், சிகிச்சைக்கு தேவையான படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய  கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

    கடந்தாண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது,  நிவாரணப் பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும் ரூ.11.54 கோடியை வழங்கினார். இந்நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது. மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம்  ஆகியவற்றை வழங்கினர். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர்  போன்ற உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: