கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா? (வீடியோ)
2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வெகுவாக குறைந்திருந்தது. ஆனாலும் ஏற்கனவே நாம் ஏற்படுத்தியிருக்கும் காற்று மாசும் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க காரணமென்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 6, 2021, 2:11 PM IST
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் காற்று மாசுப்பாட்டை கணக்கிடுவது வழக்கம். அதன்படி உலகம் முழுவதும் கடந்த 40 ஆண்டுகளுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டு அதிகரிப்பால் காற்று மாசுபாட்டின் விகிதம் வெகுவாக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. அதிகபட்சமாக 2019 ஆண்டு 3700 கோடி டன் கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியேற்றபட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் 202 ஆம் ஆண்டில் இது 3400 கோடி டன்களாக குறைந்தது.
வாகனங்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைட்டில் நைட்ரஜன்-டை-ஆக்ஸை்டு என்ற நச்சு வாயுவும் கணிசமான விகிதத்தில் வெளியேற்றபடுகிறது. அந்த வாயு நுரையீரலை பாதித்து, ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமைகிறது. எனவே உலகம் முழுவதும் ஆண்டு இறப்பு விகிதத்தில் 8% மக்கள் காற்றுமாசு காரணமாக இறக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு 7% விழுக்காடு வரை குறைந்திருந்தாலும், ஏற்கனவே சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் காற்று மாசு கொரொனா உயிரிப்புகள் அதிகரிக்க காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரு நகரங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காற்றுமாசு என்பதும் காரணமாக இருக்கலாம் என கருதபடும் நிலையில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இதேபோல காற்றுமாசை குறைத்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.
கார்பன்-டை-ஆக்ஸைட்டின் அதிகபடியான வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதல் ஏற்பட்டு வெள்ளம், காட்டு தீ போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் வைரஸ் பரவலால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவும் காற்றுமாசு தடையாக உள்ளது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
மேலும் படிக்க...Happy Birthday AR Rahman | இசைபுயலின் 7 உணர்வுபூர்வமான பாடல்கள் (வீடியோ)உலகம் கொரோனாவிலிருந்து மீண்டாலும் நம் சுற்றுச்சூழலை மாசுகளிலிருந்து விடுபட செய்தலே உலகம் எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரும் பரீட்சையாகும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
வாகனங்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைட்டில் நைட்ரஜன்-டை-ஆக்ஸை்டு என்ற நச்சு வாயுவும் கணிசமான விகிதத்தில் வெளியேற்றபடுகிறது. அந்த வாயு நுரையீரலை பாதித்து, ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமைகிறது. எனவே உலகம் முழுவதும் ஆண்டு இறப்பு விகிதத்தில் 8% மக்கள் காற்றுமாசு காரணமாக இறக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு 7% விழுக்காடு வரை குறைந்திருந்தாலும், ஏற்கனவே சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் காற்று மாசு கொரொனா உயிரிப்புகள் அதிகரிக்க காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்