கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது. இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பை ஸ்புட்னிக் வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் கொண்டுள்ளன என்று ரஷ்யாவின் நோவாசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வக தலைவரும், ரஷ்ய அறிவியல்கள் அகாடெமி உறுப்பினருமான செர்ஜி நெடேசோவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெடேசோவ் குறிப்பிடுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகிற ஆதாரங்கள், டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பு இருப்பதை காட்டுகின்றன என்றார்.
இந்நிலையில், கமலேயா ஆராய்ச்சி மையத்தின் மக்கள் தொகை மாறுபாடு பொறிமுறைகள் ஆய்வுக்கூடத்தின் தலைவர் விளாடிமிர் குஸ்சின், “டெல்டா வைரசால் ஏற்படும் கொரோனாவின் கடுமையான மற்றும் அபாயகரமான நிகழ்வுகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீத பாதுகாப்பை ஸ்புட்னிக் வி தடுப்பூசி உறுதி செய்கிறது” என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு 3,08,74,376 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 724 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,764 ஆக உயர்ந்துள்ளது.
Read more : 12-18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசி: ஜைடஸ் கெடிலா வாக்சினுக்கு விரைவில் அனுமதி - ஆகஸ்டில் சப்ளை
நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,00,14,713 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 39,649 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் 4,50,899 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று வரை நாடு முழுவதும் 37,73,52,501 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : அரசியலுக்கு இனி வரவே மாட்டேன் - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
இந்நிலையில், தமிழகத்தின் முதலாவது அங்கீகாரம் பெற்ற ஸ்புட்னிக் வி தடுப்பூசி மையமாக கோவை சாயி பாபா காலனியில் உள்ள ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கே, முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், பத்திரிக்கை- ஊடகத்தினர், காவல்துறையினர், மூத்த குடிமக்கள், திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்து.
தடுப்பூசி செலுத்த 'கோவின்' இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி முதல் தவணை செலுத்திய பின்னர், இரண்டாவது தவனையாக 21 நாட்களில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine