Home /News /coronavirus-latest-news /

Exclusive: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்டியலில் நாகை: பாதிப்பை குறைக்க எடுக்கப்படும் சிறப்பு நடவடிக்கைகள் என்ன?

Exclusive: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்டியலில் நாகை: பாதிப்பை குறைக்க எடுக்கப்படும் சிறப்பு நடவடிக்கைகள் என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த 10 நாட்களாக 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் நாட்களில் நாகை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி என பல்வேறு பகுதிகளில் இதுவரை 20,000 கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாகை மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் லியாகத் அலி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்களைக் கூறியுள்ளார்.



Also read: தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு பரிசோதனை மீண்டும் தொடங்கியது..

தினமும் 300 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு அதிகரிக்கும் பட்டியலில் நாகை மாவட்டம் இடம்பெற்றிருப்பதால் கடந்த 10 நாட்களாக 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதாக லியாகத் தெரிவித்தார். மேலும், நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரப் பகுதிகளில் எடுக்கப்படும் பரிசோதனைகளில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் செய்யப்படும் பரிசோதனைகளில் கொள்ளிடம், குத்தாலம், தலைஞாயிறு, செம்பனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் கூறினார்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும், அரசிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Nagapattinam

அடுத்த செய்தி