கொரோனாவை தடுக்கலாம் என எரி சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...!

கொரோனாவை தடுக்கலாம் என எரி சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 10, 2020, 7:31 PM IST
  • Share this:
கொரோனா வைரஸை ஆல்கஹால் கட்டுப்படுத்தும் என்ற தவறான தகவலை நம்பி, ஈரானில் எரி சாராயமான மெத்தனாலைக் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையிலும், ஈரான் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.

ஈரானின் முன்னாள் தூதரக அதிகாரி ஹூசேன் ஷேக்லெஸ்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். தற்போது வரை, அந்நாட்டில் வைரஸ் பாதிக்கப்பட்டு 291 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 54பேர் உயிரிழந்துள்ளனர்.


தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை ஈரான் காலவரையின்றி ரத்து செய்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, இதற்கு தீர்வு என்று பல தவறான தகவல்கள் வைரசை விட வேகமாக சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆல்கஹால் கொரோனாவை குணப்படுத்தும், பூண்டு கலந்த நீர் கொரோனாவை குணப்படுத்தும் என்று பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதிகம் விபரம் அறியாதவர்கள் கொரோனா தாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தில், மேற்கண்ட வதந்திகளை நம்பி அதன்படி செய்கின்றனர். இது அவர்களுக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.ஆல்கஹால் கொரோனாவை குணப்படுத்தும் என்று பரவிய தவறான தகவல்களால் ஈரானில் எரி சாராயத்தைக் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும் பல இடங்களில் சட்ட விரோதமாக எரி சாராயம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை விட, எரி சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading