ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஈராக்!

இஃப்தார்

இஃப்தார்

கொரோனாவால் விற்பனை குறைவு என வியாபாரிகள் கவலை.

 • Share this:
  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈராக்கில் ரம்ஜான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஈராக்கில் ரம்ஜான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

  மொசூல் நகரின் பாரம்பரிய சந்தையான சுக் அல் நேபியில் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 18 வரை அங்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பகல் நேரங்களில் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

  ஆனால் கொரோனாவால் பொருளாதார நிலை சரிந்திருப்பதால் முந்தைய ஆண்டுகளை விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  Also see...


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: