• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரான் செயற்கைகோள்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரான் செயற்கைகோள்!

ஈரான் செயற்கைகோள் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது!

ஈரான் செயற்கைகோள் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது!

துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    ஈரான் 4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    அமெரிக்காவுடனான பதற்றம் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் மத்திய ஈரானில் உள்ள பாலைவனத்தில் இருந்து செலுத்தப்பட்ட 'நூர்' என்ற செயற்கைகோள் இலக்கை நோக்கி விண்ணில் பாய்ந்தது. அந்த செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் சுற்றி வளைத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: