கொரோனாவை கையாளுவதற்கு சீனாவைப் பின்பற்றும் ஈரான்!

"கண்காட்சி அரங்குகள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன"

கொரோனாவை கையாளுவதற்கு சீனாவைப் பின்பற்றும் ஈரான்!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இதைக் கையாள்வதற்கு சீனாவைப் பின்பற்றி வருகிறது.

கொரோனா வைரஸால் சீனா, இத்தாலிக்குப் பிறகு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது ஈரான் ஆகும். சுமார் பன்னிரண்டாயிரத்து எழுநூறு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் 4,339 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 600க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாடு முடுக்கிவிட்டுள்ள சூழலில், சீனாவைப் போலவே ஈரானிலும் கண்காட்சி அரங்குகள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஈரானில் 11,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஈரானுக்கு உதவ சீனா தனது மருத்துவக்குழுவை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading