அச்சுறுத்தும் கொரோனா... ரத்தாகிறதா ஐ.பி.எல்..? பிசிசிஐ தீவிர ஆலோசனை

IPL 2020 | BCCI | இந்த தடைகளை எல்லாம் தாண்டி போட்டியை நடத்தினாலும் வெளிநாட்டு வீரர்கள் யாருக்காவது இந்தியாவிற்கு வந்தபின் கொரானோ தொற்று ஏற்படுவது, தொடரை பாதியில் கைவிடுவது போன்ற சிக்கல்களையும் எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அச்சுறுத்தும் கொரோனா... ரத்தாகிறதா ஐ.பி.எல்..? பிசிசிஐ தீவிர ஆலோசனை
ஐ.பி.எல்
  • Share this:
உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. ஐ.பி.எல் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வீரர்களும் இதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரானோ வைரஸ் பாதிப்பு ஐ.பி.எல் தொடருக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான வீரர்கள் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளான கத்தர்ஸ் மோட்டர்ஸ், வடகொரியாவின் பயாங் மாரத்தான் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆலோசனை நடத்தி உள்ளனர்.


ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து பிசிசிஐ பேசி உள்ளது. எந்ததுறை சார்ந்த விளையாட்டாக இருந்தாலும் அதனை அந்த போட்டி நடத்தும் நிர்வாகமே முடிவெடுக்க வேண்டும் என்றும் நீங்கள் சுகாதாரத்துறையிடம் ஆலோசனை பெறுங்கள் என்றும் விளக்கமளித்துள்ளனர். அதை தொடர்ந்து பிசிசிஐ சுகாதாரத்துறையிடம் கலந்து ஆலோசித்து உள்ளது.



பலக்கட்ட ஆலேசானைகளுக்கு பின் அடுத்த 2 அல்லது 3 நாட்கள் கழித்தே பிசிசிஐ உறுதியான முடிவெடுக்க உள்ளது. தற்போது வரை அனைத்து முன்ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்று கங்குலி தெரிவித்தாலும் கொரோனா குறித்த ஆலோசனைகள் நடைபெற்று தான் வருகிறது.ஒருவேளை ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ-க்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பீடு ஏற்படும். ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஸ், டிக்கெட் விற்பனை என அனைத்து வகையிலும் வருமான இழப்பீடை பிசிசிஐ சந்திக்க நேரிடும். இந்த தடைகளை எல்லாம் தாண்டி போட்டியை நடத்தினாலும் வெளிநாட்டு வீரர்கள் யாருக்காவது இந்தியாவிற்கு வந்தபின் கொரானோ தொற்று ஏற்படுவது, தொடரை பாதியில் கைவிடுவது போன்ற சிக்கல்களையும் எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக ஐ.பி.எல் தொடரைப் பார்க்க வரும் ரசிகர்களும் எதுபோன்ற பாதுகாப்பு அளிக்கப்படும், அனைவரையும் பரிசோதனை செய்தபின் மைதானத்தில் அனுமதிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அதே சமயம் உலகம் முழுவதும் கொரானோ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி வரும் இந்தவேளையில், ஐ.பி.எல் தொடர் தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆகையால் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் இந்த ஆண்டு நடைபெறுமா  என்பது வரும் நாட்களில் தான் உறுதியான பதில் கிடைக்கும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.






Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

 
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading