ஹோம் /நியூஸ் /கொரோனா /

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு

பி.சி.சி.ஐ

பி.சி.சி.ஐ

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

  13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

  ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் போட்டி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. மே 3ஆம் தேதிக்கு பிறகு அரசு எடுக்கும் முடிவை பொறுத்து போட்டியை நடத்துவதா? இல்லையா? என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: CoronaVirus, IPL 2020