• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கண்ணுக்கு தெரியாத கொரோனாவை மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்... மோடி நம்பிக்கை

கண்ணுக்கு தெரியாத கொரோனாவை மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்... மோடி நம்பிக்கை

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்னும் எதிரியை, நம்முடைய மருத்துவர்கள் வீழ்த்துவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கர்நாடகாவில் உள்ள ராஜீவ்காந்தி நல்வாழ்வு அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    அப்போது, மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை உலகம் நம்பிக்கையோடும் நன்றியோடும் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

    கொரோனா தொற்று கண்ணுக்கு தெரியாததாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ பணியாளர்கள் வெல்ல முடியாதவர்களாக உள்ளனர் என்றும், இந்த போரில் நமது மருத்துவ பணியாளர்கள் உறுதியாக வெல்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவர்களிடம் இருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய இரண்டையும் உலகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களும், 15 ஆயிரம் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அவர்களில் பெண்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அதிகம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். களத்தில் முன்நிற்கும் போராளிகளான மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையையும் ஏற்றக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார் .

    Also read... கட்டுக்கடங்காத கொரோனா: உதவி கேட்ட மகாராஷ்டிரா - மும்பை சென்ற கேரள மருத்துவக் குழு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: