• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் உருவாக்கிய கால்களால் தண்ணீர் குழாயை இயக்கி கைகளைக் கழுவும் இயந்திரம்..!

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் உருவாக்கிய கால்களால் தண்ணீர் குழாயை இயக்கி கைகளைக் கழுவும் இயந்திரம்..!

கால்களால் தண்ணீர் குழாயை இயக்கி கை கழுவும் இயந்திரம்

கால்களால் தண்ணீர் குழாயை இயக்கி கை கழுவும் இயந்திரம்

இந்த உபகரணத்தின் முக்கிய நோக்கமே பொதுஇடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடுவோர் தங்கள் கைகளை அச்சமின்றி சுத்தப்படுத்திகொள்ள வேண்டும் என்பதுதான்.

  • Share this:
    கொரோனா தொற்றுள்ளவர் தொட்ட இடத்தை பிறர் தொட்டாலே நோய் பாதிப்புக்குள்ளாவர் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் பைப்பை கையால் தொடாமல் பொது இடங்களில் மக்கள் தங்கள் கையை சுத்தம் செய்ய உதவும் உபகரணத்தை கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார். 

    கொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முதலில் முன் வைக்கப்படும் ஆலோசனை கைகளை நன்கு கழுவ வேண்டும் என்பதே. அப்படி கழுவுவதற்காக கொரோனா தொற்றுள்ளவர் பயன்படுத்திய தண்ணீர் குழாயையோ, கிருமி நாசினி உள்ள கலனையோ தொட்டால் நமக்கும் அதனால் தொற்று வந்துவிடுமோ? என்ற அச்சம் எல்லோருக்கு எழுகிறது.

    இந்த அச்சம் காரணமாக பொது இடங்களுக்கு செல்ல நேரும் போது அங்கு கையை கழுவ தயக்கம் ஏற்படும். இந்த பிரச்னைக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடுவை சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் கூலி தொழிலாளி பாபு தீர்வு கண்டுள்ளார்.

    இவர் உருவாக்கியுள்ள இந்த உபகரணத்தை யாரும் கையில் தொடவே வேண்டியதில்லை. தண்ணீர் குழாயையும் சரி, அருகில் உள்ள கிருமி நாசினியையும் சரி கையில் தொடவே தேவையில்லை.கால்களாலேயே இயக்கி கைகளை அச்சமின்றி கழுவிச்செல்லலாம்.

    இது குறித்து கூலி தொழிலாளி பாபு கூறுகையில்,  ”இந்த உபகரணத்தை செய்ய முற்பட்ட போது ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சளைக்காமல் பழைய பொருள்களை கொண்டே இந்த உபகரணத்தை செய்தேன். இது தற்போது கடையாலுமூடுவில் உள்ள தெருமுக்கில் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் வரும் அனைவரும்  ஆர்வமுடன் கையால் தொடாமலேயே கிருமி நாசினியையும், தண்ணீரையும் கொண்டு கைகளை கழுவிச்செல்கின்றனர்”என்று கூறினார்.

    மேலும் பாபுவின் இந்த உபகரணத்தின் முக்கிய நோக்கமே பொதுஇடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடுவோர் தங்கள் கைகளை அச்சமின்றி சுத்தப்படுத்திகொள்ள வேண்டும் என்பதுதான். அதனை மெய்பிக்க காவல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இந்த உபகரணத்தை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: