முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா சிகிச்சை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிமுறையில் சிகிச்சை

கொரோனா சிகிச்சை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிமுறையில் சிகிச்சை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது. மொத்தம் 5,94,386 பேர் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது. மொத்தம் 5,94,386 பேர் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு அறிவுரையின் படி தமிழக அரசு மருத்துவமனைகளில் இனி  ஒரே செயல்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் நோயாளிகளுக்கு 4 ஆர்ம் ட்ரையல் முறை என்று நான்கு மருந்துகள் கொண்டு சிகிச்சை செய்யப்பட்டது வெற்றியை தந்தது. இதையடுத்து இந்த சிகிச்சைமுறை தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கொரோனா நோயாளிகள், அறிகுறியுடன் கூடிய நோயாளிகள், தீவிர சிகிச்சை தேவை படுவோர் என்று வகை பிரித்து குறிப்பிட்ட மருந்துகள் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சையை விரைவுப்படுத்த அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரெட்மிவியர், டாப்சிலிமாப் என்ற விலை உயர்ந்த மருந்துகள் மாவட்ட மருத்துவமனைகள் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஒவ்வொரு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் 1,500 பல்ஸ்ஆக்சிமீட்டரும், மாவட்ட மருத்துவமனைகளுக்கு 500 பல்ஸ் ஆக்சிமீட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மூன்று வாரங்களில் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை திரும்ப தாக்கும் வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளின் வாசலிலும் ஆக்சிஜன் சிலின்டருடன் கூடிய இருக்கைகள் நோயாளிகளை அழைத்து செல்லும் வழிமுறைகளையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Govt hospitals, Tamil Nadu