கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை... மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை... மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
மேல்சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர்.
அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக 7ஆம் தேதி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதே போல் அவருடைய உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 8 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு காலவர்கள் பாதுகாப்போடு ஆம்புலன்ஸில் அடுத்த சில நிமிடங்களில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
மேலும் நேற்று இரவு 9.40 மணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை வருகை தந்தார். அரை மணி நேரம் மருத்துவர்களோடு ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.