திருவள்ளூர் :அயப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

அயப்பாக்கம் கிராம ஊராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அயப்பாக்கம் கிராம ஊராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஊராட்சி தலைவர் துறை வீரமணி.  நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் முகாம் அமைத்து கோவாக்சின் செலுத்தும் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதியில் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று  மற்றும் இன்று மட்டும் சுமார் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .

  அதேபோல் பொதுமக்கள் முககவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஆட்டோக்களில் வாகனங்களில் பயணம் செய்தல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் உள்ளிட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி அவர்கள் நேரில் வந்து களப்பணியாளர்கள் உடன் சேர்ந்து அவரும் தீவிர வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துவருகிறார்.

  முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தும் அவர்களுக்கு முக கவசத்தையும் வழங்கிவருகிறார்.ஆவடி கேம்ப் சாலை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் அதிகாரிகள்  மற்றும் காவல் துறையினர் களப்பணியாளர்களுடன் அனைத்து வாகனங்களையும் 100% பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

  செய்தியாளர் கண்ணியப்பன் - சென்னை
  Published by:Tamilmalar Natarajan
  First published: