கொரோனா ஹெல்மட்...! வினோதமான முறையில் விழிப்புணர்வு செய்த காவல் ஆய்வாளர்

"தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்தார்."

கொரோனா ஹெல்மட்...! வினோதமான முறையில் விழிப்புணர்வு செய்த காவல் ஆய்வாளர்
மாதிரிப்படம்
  • Share this:
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோன வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், சுகாதார துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நோய் தொற்றின் தீவிரம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல மத்திய,மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது. இந்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி கொண்டுள்ளனர்.அவர்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ரஜிஸ்பாபு என்பவர் கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்துகொண்டு பாடி மேம்பாலத்தில் விழிப்புணர்வு செய்தார்.   அந்த பகுதி வழியாக தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்தார்.அதே போல மக்கள் அதிகம் கூடும் இடமான வில்லிவாக்கம் மார்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று சமூக விலகல் குறித்தும், முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றகூடாது எனவும் எச்சரித்தார். நூதன முறையில் காவல் ஆய்வாளர் மேற்கொண்ட விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading