கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி மறுப்பு: கைவிடப்பட்டது இந்திய-இலங்கை கிரிக்கெட் தொடர்

இந்தியா இலங்கை இடையே இம்மாதம் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் கொரோனா பரவல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி மறுப்பு: கைவிடப்பட்டது இந்திய-இலங்கை கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி விரர்கள்
  • Share this:
கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அரசு தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதால் இந்தியா இலங்கை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டது

இலங்கை செல்லவிருந்த இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. கொரோனா பரவி வரும் நிலையிலும் இந்திய அணி விளையாட சம்மதித்துள்ளதாக புதன்கிழமை இலங்கை தெரிவித்தது.

இந்நிலையில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளதால் கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டுள்ளது.


இதற்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் இறுதியில் தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க...

சென்னையில் ஊரடங்கு தீவிரமாகுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கும் தமிழக அரசு.. 

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading