இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மாணவி டிஸ்சார்ஜ் ஆனார்..!

இன்று கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு பேர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மாணவி டிஸ்சார்ஜ் ஆனார்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 13, 2020, 6:49 PM IST
  • Share this:
இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மாணவி கேரள மருத்துவமனையில் இருந்து உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ள அந்த மருத்துவ மாணவி கண்காணிப்பிலேயே இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அறியப்பட்ட மூன்று மருத்துவ மாணவிகளுள் ஒருவர் தற்போது உடல்நலம் தேறியுள்ளது ஆறுதல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மற்ற இரு மாணவிகளும் மெல்ல உடல்நலம் தேறி வருவதாகவே கூறப்படுகிறது.


இன்று கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: கனடா குடியுரிமை வாங்கும் 4 வெளிநாட்டவரில் ஒருவர் இந்தியர்..!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading