Coronavirus Latest Update: இந்தியாவில் இதுவரை 2902 பேருக்கு கொரோனா பாதிப்பு

Coronavirus Latest Update: இந்தியாவில் இதுவரை 2902 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோப்புப்படம்
  • Share this:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 1023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ள்ளது.

அதேசமயம், டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துக்கொண்டோர், அவர்களுடன் தொடர்புடையோர் என 1023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் டெல்லி நிகழ்வு தொடர்புடையோர் மட்டும் 30 சதவீதம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட நபர்களில் 20 வயதுகுட்பட்டோர் 9 % என்றும், 21 இருந்து 40 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 41% பேரும், 40 இருந்து 50 வயதுகுட்பட்டோர் 33% பேரும், 60வயதுக்கு மேற்பட்டோர் 17% பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகக்குறைவு என்றும், மொத்தத்தில் 1% பேர் மட்டுமே வெண்டிலேட்டரில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




 








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading