இந்தியாவில் மூன்று வாரங்களில் பாதியாக குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு!

கோப்புக் காட்சி

ஒரு வாரத்தின் சராசரி என்பது கடந்த மே 8ம் தேதியில் 3, 91,263 ஆக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தற்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 1,95,183 என்று 2 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த மூன்று வாரங்களில் 50 சதவீதம் அளவு குறைந்துள்ளது.

  இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத மத்தியில்  கொரோனா தொற்றின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கியது, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கியது.  அதன் பின்னர், தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்ளில் தொற்றின் பரவல் தீவிரமடைந்தது.

  தினசரி பாதிப்பு என்பது 4 லட்சத்தை கடந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க  முழு ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் வேகம் சற்றுக் குறைய தொடங்கியுள்ளது.

  கடந்த மே 6ம் தேதி இந்தியாவின் தினசரி கொரோனா பரவல் 4,14,280 என உச்சம் தொட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கிழே குறைந்துள்ளது. இதேபோல், ஒரு வாரத்தின் சராசரி என்பது கடந்த மே 8ம் தேதியில் 3, 91,263 ஆக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தற்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 1,95,183 என்று 2 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.

  முதல் அலையுடன் ஒப்பிடும்போது இந்த கால அளவு 50 சதவீதம் குறைவாகும்.

  மேலும் படிக்க.. விபச்சாரத்தில் தள்ள முயற்சி- காதல் கணவன் மனைவி புகார்..

  கொரோனாவின் தினசரி பாதிப்பு குறைந்தபோதிலும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆயிரத்துக்கு அதிகமாகவே உள்ளது.  கடந்த மே 16ம் தேதி ஒரு வாரத்தின் சராசரி தினசரி இறப்பு 4,040 ஆக இருந்தது. தற்போது அது 3,324 ஆக உள்ளது. மத்திய அரசின் தரவுப்படி நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில்  1, 65,553 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  2,76,309  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். 21,14,508 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

  இதையும் படிக்க.. கடலூர் மாவட்டத்தில் பாதியாக குறைந்த கொரோனா பாதிப்பு..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: