நாட்டை உலுக்கும் கொரோனா இரண்டாம் அலை - கவலையுடன் எதிர்கொள்ளும் இந்தியர்கள்... ஆய்வில் தகவல்!

கொரோனா

உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ள அதே வேளையில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவிலிருந்து வர தடை விதித்துள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ள அதே வேளையில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவிலிருந்து வர தடை விதித்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இடுகாட்டில் எரிக்க கூட இடமின்றி சாலைகளில் பிணமாக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் நம் நாட்டின் கொரோனா அவல நிலையை நமக்கு உணர்த்துகின்றன.

  உலகமே தற்போது தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு பதில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை இந்தியர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தான். குறிப்பாக நாள்தோறும் நிகழும் பேரழிவுகளுக்கு மத்தியில் இந்த நெருக்கடியை இந்திய மக்கள் துணிச்சலாக எதிர் கொள்கிறார்களா, அவர்களது மனநிலை என்ன உள்ளிட்ட பல கேள்விகள் உலகநாடுகளிடையே எழுந்துள்ளன. குளோபல் கன்ஸ்யூமர் டிராக்கர்' என்று அழைக்கப்படும் டெலாய்ட்டின் சமீபத்திய ஆய்வில், இந்த தொற்று நோயின் இரண்டாவது அலைகளின் போது பதற்றம் மற்றும் கவலை அடிப்படையில் இந்தியா 18 நாடுகளில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  தொற்று ஏற்படுத்தி வரும் அழிவுகளை கண்டு இந்தியாவில் 21 சதவீத மக்கள் கவலையுடன் உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சிலியில் 16% மக்கள், போலந்தில் 13%, தென்னாப்பிரிக்காவில் 13%, இத்தாலியில் 13% மக்கள் கவலையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 30 நாள் பகுப்பாய்வு அடிப்படையிலான இந்த நுகர்வோர் கணக்கெடுப்பில், தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கு இந்தியர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக பொருட்களை வாங்க விரும்புவது உள்ளிட்டவை மூலம் எதிர்காலத்தை எச்சரிக்கையுடன் அணுகுவது கண்டறியப்பட்டுள்ளது.

  முக்கிய கண்டுபிடிப்புகள்:

  * தொற்றுக்கு மத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதை தவிர்க்க மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவு ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மருந்துகள் (22 சதவீதம்), எலக்ட்ரானிக்ஸ் (34 சதவீதம்), ஆடை (33 சதவீதம்), உணவகங்களிலிருந்து ஆன்லைனில் ஆர்டர் / டேக்-அவேஸ் (33 சதவீதம்) இந்திய மக்கள் வாங்கியுள்ளனர்.

  Also read... கொரோனவை தடுக்க ஆயுர்வேத மூலிகை உணவுகள்... மத்திய அரசு பரிந்துரை!

  * மேற்காணும் செலவு நோக்கம் நுகர்வோர் கட்டாய செலவு பொருட்களில் கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது. உதாரணமாக, 48 சதவீத நுகர்வோர் சுகாதாரத்துக்கான நிகர செலவு நோக்கத்தையும், 33 சதவீத நுகர்வோர் மருந்துகளுக்காகவும், மளிகைப் பொருட்களை நோக்கி 47 சதவீத நுகர்வோரும், வீட்டுப் பொருட்களுக்கு 44 சதவீத நுகர்வோரும் ஆன்லைனை சார்ந்து ஆர்டர் செய்துள்ளனர்.

  * கூடுதலாக பிப்ரவரி 2021-இல் இருந்ததை விட பணியிடங்களுக்குத் திரும்புவதில் இந்தியர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் இருந்த 15 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தற்போது 28 சதவீதம் பேர் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவதை பற்றி கவலைப்படுகிறார்கள்.

  * பாதுகாப்பாக உணராத காரணத்தால் கடைக்கு செல்வது, ஒரு ஹோட்டலில் தங்குவது, பணியிடத்திற்குத் திரும்புவது, விமான பயணம் உள்ளிட்ட இன்னும் பல செயல்பாடுகளில் ஈடுபட இன்னும் பல தனிநபர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கவில்லை.

  * பணம் கூடுதலாக செலவானாலும் சுமார் 67% நுகர்வோர் உள்ளூர் மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விரும்புகிறார்கள். மீதமுள்ளோர் தொற்று நோய்களின் போது நன்கு பதிலளித்த பிராண்டுகளை வாங்க விரும்புகிறார்கள்.

  * 61% நுகர்வோர் தங்கள் வாகனத்திற்கான வழக்கமான பராமரிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். 47% பேர் தங்கள் காரை தற்போதைய சூழலில் மாற்ற தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

  * அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 71% நுகர்வோர் பொது போக்குவரத்து செலவுகள் மற்றும் 63% பேர் ஆன்லைனில் புக் செய்யும் வாகன சவாரி செலவுகள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: