விலை அதிகரித்தாலும் குறையாத கூட்டம்...! மதுகுடிப்பதைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை என்ன?

கோப்புப்படம்

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 14.2% விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உடையவர்கள்.

  • Share this:
    கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் பல மாநிலங்களில் அதிகம் சர்ச்சைக்குள்ளானது. காரணம் மதுக்கடைகள் திறப்புதான் வரியை அதிகரித்தாலும் மதுக்கடைகளில் கூட்டம் குறையவில்லை. உண்மையில் குடியைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை என்ன?

    தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, தெலங்கானா என பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறந்தபோது கூடிய கூட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான்.மது அருந்துவது தனிநபரின் விருப்பத்தை தாண்டி அரசுக்கு வருமானம் தரும் தொழிலாக பல மாநிலங்களிலும் அமைந்துவிட்டதே குடிப்பழக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமானது.

    உண்மையில் கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவில் குடிப்பழக்கம் 38 விழுக்காடு வரை அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 4.3 லிட்டர் மது அருந்திய இந்தியர்கள் தற்போது 5.9 லிட்டர் அருந்துகின்றனர்.

    உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மது அருந்துபவர்கள் அதிகமுள்ள நாடு இந்தியா. பத்து வயது முதல் 70 வயதுடையவர்களில் 14 விழுக்காட்டினர் மது குடிப்பவர்கள்தான். மொத்த மக்கள் தொகையில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். 17 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற அளவிலேயே மது அருந்துவோர் பாலின விகிதம் இருக்கிறது. உலகிலேயே விஸ்கி அதிகம் அருந்தும் நாடு இந்தியா.

    தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 14.2% விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உடையவர்கள்.

    சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப் ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த 3 மாநிலங்களோடு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவாவிலும் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் மது விற்பனை என வரும்போது இந்த மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களே நாட்டின் 45 விழுக்காடு மதுபானங்களை விற்பனை செய்கின்றன.

    இவ்வளவு மது குடிக்கும் நாட்டில் அதுசார்ந்த பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. நாடு முழுவதும் 5 கோடியே 70 லட்சம் பேர் குடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளானர். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு குடிநோய்க்கு சிகிச்சை பெற வேண்டியவர்கள் உள்ளதாக  சமூக நீதித்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published: