கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டு வந்துள்ளதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், கடவுளின் ஆசீர்வாதத்தால் தற்போது அதிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் ஒன்றும் நகைச்சுவையானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள சானியா, தனது இரண்டு வயதுக் குழந்தை மற்றும் குடும்பத்தை விட்டு தனிமைப்படுத்திக் கொண்டது மிகப்பெரிய வேதனையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பாக இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒன்றாக இணைந்து இந்த வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரின் நிலை நினைத்தால் எனக்கு உண்மையில் பயமாகத்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.