• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சாதகமான சூழ்நிலையால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன.. விவரம்..

சாதகமான சூழ்நிலையால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன.. விவரம்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா காலத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு, இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன.

  • Share this:
    சர்வதேச அளவில், சந்தைகளில் நிலவும் சாதகமான சூழ்நிலைகளின் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42,566 புள்ளிகள் என்ற உச்சத்தையும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,452 என்ற புதிய உச்சத்தையும் பதிவு செய்துள்ளன.

    மேலும் படிக்க...பட்டாசு வெடிக்கத் தடைகோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது தேசிய பசுமை தீர்ப்பாயம்..

    2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 41,600 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் 25,900 புள்ளிகள் என்ற அளவிற்கு சுமார், 15,700 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, ஜனவரி மாதம் 12,200 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது, கொரோனா காரணமாக மார்ச் மாதம் 7,735 புள்ளிகள், அதாவது சுமார் 4,500 புள்ளிகள் சரிந்தது.

    இந்நிலையில், கொரோனா அச்சம் விலக தொடங்கியது , முதலீடுகள் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் அதிகரிக்க தொடங்கிய பங்குச்சந்தை இன்று 42,566 புள்ளிகள் மற்றும் 12,452 என்ற புதிய உச்சங்களை பதிவு செய்துள்ளன.

    மேலும் படிக்க..சென்னையில் பிரபல துணிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி காஸ்ட்லி புடவைகளை திருடிய பெண் கைது

    கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், தற்போது முதலீடுகள் மீண்டும் இந்திய பங்குச்சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில்,22,033 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து முதல் 5 வர்த்தக நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தைக்குள் 8381 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வந்துள்ளன.

    அமெரிக்க தேர்தல் முடிவுகளில் எந்த குழப்பம் இன்றி, தெளிவாகி உள்ளதால், முதலீட்டாளர்கள் மேலும் ஸ்திரமான முதலீடுகளை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: