2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸின் கோரதாண்டவம் குறையாமல் நீடித்து வருகிறது. புதிது புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ்கள் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மக்களை அடுத்தடுத்து இம்சித்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றின் மூலமாக பரவக்கூடும் என்பதால், மக்கள் கட்டாயம் முக்கக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திருவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால் முகக்கவசம் அணிவது வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான மற்றும் பயனுள்ள சுகாதார நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்நிலையில் கொரோனாவை செயலிக்க செய்யும் விதமாகவும், எளிதில் மக்கும் தன்மை கொண்டதாகவும் புது வகை கொரோனா மாஸ்க் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ள புதிய முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிர எதிர்வினையாற்றும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்களால் பூசப்பட்ட புது முக்ககவசம் ஆனது, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை அழிப்பதோடு, எளிதில் மக்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய மாஸ்க் சிரமமில்லாமல் சுவாசிக்கவும், அடிக்கடி துவைத்து பயன்படுத்தவும் முடியும்.
முக்கியமாக கொரோனா வைரஸ் காற்றில் பரவும் சுவாசத் துகள்கள் வழியாக பரவுவதாக எச்சரித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வழக்கமான மாஸ்க்கை அணிவதன் மூலம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமுள்ள மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில், விலை அதிகமான மாஸ்குகளை பயன்படுத்தினாலும் அவை ஆன்டிவைரல் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் 87 சதவீதமாக அதிகரிப்பு - ஆய்வில் தகவல்
"தற்போது உள்ள வைரஸ்களை வடிகட்டுமோ தவிர அவற்றைக் கொல்லாது. எனவே, முகக்கவசங்களை சரியாக அணியப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால் தொற்று பரவ வாய்ப்புள்ளது" என்று சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
Also Read : அதிகரிக்கும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பித்த சீனா
தாமிர நானோ துகள்கள் பூசப்பட்ட துணியுடன் கூடிய மூன்று அடுக்குகள் மற்றும் ஒற்றை அடுக்கு முகக்கவசங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று அடுக்கு மாஸ்கள், ஒற்றை அடுக்கு மாஸ்குகளை விட சிறப்பாக செயல்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல அடுக்குகளை கொண்ட துணி மாஸ்குகள் சமூகத்தில் கொரோனா தொற்று பரவலைக் குறைக்க உதவுவதாகவும். மேலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள கிருமிநாசினி பூசப்பட்ட மாஸ்க்குகளை அணிவதும் நல்ல பலன் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.