இப்படியும் ஒரு முகக்கவசமா..? - உத்தர பிரதேசத்தில் வினோதம்!

சிலர் மிகவும் வினோதமான செயல் மூலம் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகின்றனர்.

சிலர் மிகவும் வினோதமான செயல் மூலம் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகின்றனர்.

  • Share this:
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை நன்கு கழுவ வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பொதுமக்களின் வித்தியாசமான யோசனைகள் அவ்வப்போது வெளிவருகின்றன. சிலர் மிகவும் வினோதமான செயல் மூலம் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகின்றனர்.

சிலரது வித்தியாசமான யோசனைகள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் பழைய குளிர்சாதன பெட்டியை கிருமிநாசினி அறையாக மாற்றுவது, மைக்குகள் மூலம் முகக்கவசங்களை உருவாக்குவது போன்றவை அடங்கும். சமீபத்தில் தெலங்கானாவில் பறவையின் கூட்டை மாஸ்க்காக அணிந்து, தனது ஓய்வூதிய தொகையை வாங்க வந்த முதியவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்கும் போது, ​​மக்கள் உண்மையில் தங்கள் படைப்பு சிந்தனைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள் என்றே கூறலாம். அந்த வரிசையில் ஒரு புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

https://twitter.com/rupin1992/status/1396041839656849408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1396041839656849408%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fwatch-indian-priest-dons-tulsi-neem-mask-says-herbs-have-medicinal-benefits-3771284.html

ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவில், ஒரு சாமியார் தனித்துவமான, புதுமையான முகக்கவசம் அணிந்துள்ளார், அந்த முகக்கவசம் வேம்பு இலை மற்றும் துளசி இலைகளால் ஆனது. இரண்டையும் ஒன்று சேர்த்து மிகவும் வித்தியாசமாக அந்த முகக்கவசம் தயார் செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் இருக்கும் நபர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். அந்த சாமியார் வித்தியாசமான முகக்கவசம் அணிந்திருப்பதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அந்த சாமியார், இரண்டு மூலிகைகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

வழக்கமான துணி முகக்கவசங்களை விட ‘வேம்பு மற்றும் துளசி’ முகக்கவசங்கள் மிகச் சிறந்தவை. ஏனெனில் அவை நோயைக் குணப்படுத்த உதவும் என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது. ஒரு பக்கம், இந்த ஐடியா சரியானது இல்லை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மறு பக்கம்,  இந்த முகக்கவசம் ஒரு மூலிகை, மக்கும் தன்மை கொண்ட, சுற்றுச்சுழலுக்கு உகந்த முகக்கவசம் என்று கமெண்ட் செய்துள்ளனர். சிலர் இது ‘ஆயுர்வேத’ முகக்கவசம் என்றாலும், தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவாது என குறிப்பிட்டுள்ளனர்.
Published by:Archana R
First published: