Home /News /coronavirus-latest-news /

மருத்துவர் உடலை புதைக்க எதிர்ப்பு: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

மருத்துவர் உடலை புதைக்க எதிர்ப்பு: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்

எந்த நாடும் தனது ராணுவத்தை ஆயுதங்கள் இல்லாமல் போருக்கு அனுப்பவதில்லை. உரிய கவச உடை உபகரணங்கள் இல்லாமல்தான் இந்நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனாவை எதிர்த்த போராட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பணியில் இருக்கும் போதே உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இந்திய மருத்துவ சங்கம் மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் மருத்துவர் ராஜன் ஷர்மா, இந்திய மருத்துவ சங்க கவுரவ பொதுச் செயலாளர் மருத்துவர் ஆர் வி அசோகன் கூறுகையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து சீரிய கவனத்தில் கொள்கிறோம். தங்கள் பணியில் இருந்து இறந்திருக்கும் இந்த மருத்துவர்கள் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும்.

இது போன்ற சம்பவங்களை தடுப்பதில் மாநில அரசின் கையாலாகாத்தனம் அதை விட அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாவிட்டால் அரசாள்வதற்கான தார்மீக உரிமையை அரசுகள் இழக்கின்றன. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்ற போதும் இந்திய மருத்துவ சங்கம் அமைதி காத்தது.

அதனால் எங்கள் பொறுமை அளவற்றதல்ல. திட்டுவது, வன்முறை, எச்சில் துப்புவது, கல் எறிவது, வசிப்பிடங்களில் நுழையவும் தங்கவும் தடை ஆகியவற்றை பொறுத்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் அரசு தன் இயல்பான கடமையை செய்யும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அவர்களால் அரசியல் சாசன கடமைகளை செய்ய முடியவில்லை எனில் இது அசாதாரண காலமாக ஆகிவிட்டது போலும். இறப்பில் கண்ணிய மறுப்பு என்பது உட்சபட்ச அவமதிப்பாகும்.

மருத்துவர்கள் தங்களை அதீத ஆபத்துக்கு உட்படுத்தி தான் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறார்கள் என்பதை உணர வேண்டும். எந்த நாடும் தனது ராணுவத்தை ஆயுதங்கள் இல்லாமல் போருக்கு அனுப்பவதில்லை. உரிய கவச உடை உபகரணங்கள் இல்லாமல்தான் இந்நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனாவை எதிர்த்த போராட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அந்த போராட்டத்தில் மக்களை பாதுகாத்து இளமையிலேயே உயிரிழக்கின்றனர். இந்த சேவைகளின் மதிப்பு உணரப்படவில்லை என்றால், தங்கள் வீடுகளில் இருந்து கொள்வது மருத்துவர்களுக்கு எளிமையான காரியமாகும். சமூகம் தான் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே பல சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவம் சாராத காரணங்களுக்காக மேலும் பல சிகிச்சைகள் நிறுத்தப்பட்டால் அது துர்திருஷ்டவசமானது. எனவே மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கிறோம். அதை செய்ய தவறினால் மருத்துவ சமூகத்தின் உரிமை காக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர இந்திய மருத்துவ சங்கத்திற்கு வேறு வழி இல்லை. அரசமைப்பு கருவிகள் செயல்பட தவறினால் தகுந்த எதிர்வினையாற்ற வேண்டிவரும் என்று கூறினர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Doctors

அடுத்த செய்தி