Home /News /coronavirus-latest-news /

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பயம்... மதிப்பிழக்கும் இந்திய ரூபாய்!

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பயம்... மதிப்பிழக்கும் இந்திய ரூபாய்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 0.4 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் இன்று இந்தியாவின் பொருளாதார நலனக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிய கரன்ஸிகளில் மிகவும் மோசமான நிலையை இந்தியாவின் ரூபாய் மதிப்பு அடைந்துள்ளது. இந்தியாவில் இதுவரையில் 28 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 15 இத்தாலிய சுற்றுலாவாசிகளும் அடங்குவர். தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக இந்தியாவில் யாருக்கும் பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தையும் தாக்கியுள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 0.4 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.6 ரூபாய் ஆக உள்ளது.

    இது 75 ரூபாய் வரையில் வீழவும் வாய்ப்பு உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், சர்வதேச அளவிலான நோய் தாக்குதல் என்பதால் சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இதற்கான மீட்பு நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்போம் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் பார்க்க: ரிசர்வ் வங்கி உத்தரவை தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்- இந்தியாவுக்குள் டிஜிட்டல் கரன்ஸிக்கு அனுமதி!

    Watch Also:
    Published by:Rahini M
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி