ஹோம் /நியூஸ் /கொரோனா /

இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலைக்குரியது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலைக்குரியது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச அளவில் கவலைக்குரியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா வைரசின் B.1.617 திரிபு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதனை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதனை சர்வதேச அளவில் கவலைக்குரியதாக வகைப்படுத்தியுள்ளது.

  உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “ எங்கள் வைரஸ் பரிணாம பணிக்குழு மற்றும் எங்கள் ஆய்வக குழுக்களுடன் கலந்தாலோசித்ததில், B .1.617 இன் அதிகரித்த பரிமாற்றத்ததை உறுதிப்படுத்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இது முதற்கட்ட தகவல்கள்தான். இதன் மீதான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் எளிதாக பரவும் தன்மை கண்டுபிடிக்கப்பட்டது. எனவே B .1.617 மரபணுப் பிறழ்வை கவலைக்குரியது என வகைப்படுத்துகிறோம்” என்றார்.

  இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக WHO எச்சரித்துள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் மட்டுமே 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

  எளிதாக பரவுதல், தீவிர நோய் தொற்றை உடலில் உண்டாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்துதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறைத்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டிருக்கும் மரபணுப் பிறழ்வு 'கவனத்துக்குரிய திரிபு' என்பதிலிருந்து கவலைக்குரிய திரிபு' என்ற வகைப்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பால் நிலை உயர்த்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட B. 1.617 மரபணுப் பிறழ்வு கவலைக்குரியதாக வகைப்படுத்தபட்டுள்ளது.

  இந்தியாவில் நிலவி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் இந்தத் திரிபுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. எனினும் இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

  மேலும் படிக்க...Hand Sanitiser : சானிடைசர் பயன்படுத்தும் அளவு முறை என்ன..? எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்..? WHO பகிர்ந்துள்ள செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை

  தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக செயல்படும் திறன் உடையவை என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனினும் இது திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து இருப்பதற்கான சில ஆதாரங்கள் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, India