Indian bodybuilder Jagdish Lad : கொரோனாவால் உயிரிழந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட்

Indian bodybuilder Jagdish Lad : கொரோனாவால் உயிரிழந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட்

இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட்

உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜகதீஷ் லாட் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடியதும், திடீரென மரணம் அடைந்துள்ளதும் பாடிபில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் சிகிச்சை பலனின்றி மும்பையில் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியைச் சேர்ந்த 34 வயது ஜகதீஷ் லாட்டுக்கு திருமணமாகி மனைவி, மகளுடன் வசித்துவந்தார். அவர் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து ஜகதீஷும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி, கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

    உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜகதீஷ் லாட் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடியதும், திடீரென மரணம் அடைந்துள்ளதும் பாடிபில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் போட்டிகள் தொடங்கி, உலக பாடி பில்டர்கள் போட்டியில் பதக்கம் வென்ற ஜகதீஷ் லாட்டையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. உடல் வலிமை கொரோனா முன்பு வேலைக்கு ஆகாது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: