கொரோனா அச்சம்: பந்தில் எச்சில் தேய்க்க மாட்டோம் - புவனேஷ்வர் குமார் உறுதி

மைதானத்தில் பந்தின் மீது எச்சில் தொட்டு தேய்ப்பதை குறைத்துக் கொள்ள உள்ளாதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம்: பந்தில் எச்சில் தேய்க்க மாட்டோம் - புவனேஷ்வர் குமார் உறுதி
மைதானத்தில் பந்தின் மீது எச்சில் தொட்டு தேய்ப்பதை குறைத்துக் கொள்ள உள்ளாதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
  • Share this:
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் பந்தில் எச்சில் தொட்டு தேய்க்க மாட்டோம் என்று இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் இருந்துவருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கையாக இருந்துவருகிறது. அதன் காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. இந்தநிலையில்,  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ குழுவிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. வெளியாட்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


Also read: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 73-ஆக அதிகரிப்பு: அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மருத்துவக் குழுவினருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே மைதானத்தில் பந்தின் மீது எச்சில் தொட்டு தேய்ப்பதை குறைத்துக் கொள்ள உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர் குமார், மருத்துவக் குழுவினர் தங்களுடன் இருப்பதாகவும், அவர்கள் வழங்கும் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading