Home /News /coronavirus-latest-news /

உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்

20 லட்சத்திற்கும் அதிகமான முன்கள பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ஹர்ஷவர்தன் கூறினார்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

    ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 73வது கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், காணொளி காட்சி மூலம் இந்தியா சார்பில் பங்கேற்று பேசிய ஹர்ஷவர்தன், மிகப்பெரிய சமூகத்தை நவீன தொற்றுநோய் கண்காணிப்பு வளையத்தின் மூலம் கண்காணித்து வருவதாகவும், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

    20 லட்சத்திற்கும் அதிகமான முன்கள பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறிய ஹர்ஷவர்தன், சிறந்த முறையில் செயல்பட்டுள்ளோம் என எண்ணுவதாக கூறினார்.

    மேலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்க  கற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் மாதங்களில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Central minister Harsh Vardhan, Corona Warriors

    அடுத்த செய்தி