’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளளதாக ICMR ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 15, 2020, 9:46 AM IST
  • Share this:
இந்தியாவில் மே மாதத்திலேயே 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 21 மாநிலங்களில் கொரோனா அதிகம் பாதித்த 69 மாவட்டங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, மே மாத தொடக்கத்தில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம் பேர் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், ஐ.சி.எம்.ஆர். ஆய்வில், மத்திய அரசு கூறியதை விட 20 மடங்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100ஐ எட்டியபின், ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாட்கள் ஆனது. ஆனால், 2 லட்சத்தை எட்டுவதற்கு வெறும் 14 நாட்களும், 3 லட்சத்தை எட்டுவதற்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.


இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, நவம்பர் மாதம் மத்தியில்தான் பாதிப்பு உச்சம் தொடும். மேலும், தொற்று பாதிப்பு அளவை 97 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக குறைக்க உதவி உள்ளது. இதனால் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை அளித்துள்ளது.

ஊரடங்குக்கு பிறகு 60 சதவீத செயல்திறனுடன், பொது சுகாதார நடவடிக்கைகள் இயங்கும் நிலையில், அவை நவம்பர் முதல் வாரம் வரை தேவைகளை சந்திக்கிற அளவுக்கு இருக்கும். அதன்பின், 5.4 மாதங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் போதாது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 4 6 மாதங்களுக்கு போதாது. வென்டிலேட்டர்கள் 3.9 மாதஙகளுக்கு போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த பற்றாக்குறைகள் ஊரடங்கு போடப்பட்டதால் எதிர்பார்த்ததைவிட 83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.இந்தியாவில் தொற்று நோய்க்கான மாதிரி அடிப்படையிலான இந்த ஆய்வின்படி, ஊரடங்கு காலத்தில் நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்காக கட்டமைக்கப்பட்ட கூடுதல் திறனுடன், உச்ச பாதிப்பு அளவை 70 சதவீதம் குறைத்து, ஒட்டுமொத்த பாதிப்பை 27 சதவீத அளவுக்கு குறைக்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்பு 60 சதவீதம் வரை தடுக்கப்பட்டது.

ஊரடங்கைப் பொறுத்தமட்டில் அது கொரோனா தொற்று உச்சம் அடைவதை தாமதப்படுத்தும். தொற்றுக்கு பதில் அளிப்பதற்கு சுகாதார அமைப்புக்கு அவகாசம் வழங்கும். குறிப்பாக சோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், தொடர்பு தடம் அறிதல் ஆகியவற்றை தற்போது செய்வது போல தடுப்பூசி கிடைக்கிறவரை தொடர்ந்து மேற்கொண்டால் தொற்றின் பாதிப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also See:

சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading